வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழு
இதுவரை இல்லாத அளவிற்கு பல பிரச்சினைகளோடு எதிர்பார்த்த பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் பொதுக்குழு இன்று மீராப்பள்ளியில் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு துவங்கும் என்று எதிர்நோக்கி சரியாக 10.30 மணிக்கு ஆரம்பித்தது. துவக்க உரையாக தற்போதைய ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ் சிறிது நேரம் உரையாற்றிய பின், துணை தலைவர் இஷாக் 2 வாரங்களுக்கு முன்பு நடந்தேறிய செயற்குழு தீர்மானத்தை படித்து காட்டினார்.அதன்பின்பு, மீண்டும் யூனுஸ் எதிர்வரும் ஜமாஅத் தேர்தல் குறித்தும் நிர்வாகத்தை குறித்தும் கேள்விகள் வைத்திருப்பவர்கள் பேசலாம் என்று சொன்னார். சிறிது சலசலப்பு நிலவிய நேரத்தில் மீ.மெ. மீரா உசேன் இனி வரும் புதிய தலைவரை தேர்தல் வைத்து தேர்ந்தெடுக்காமல் தேர்வு குழு ஒன்றை நியமித்து அதனடிப்படையில் தேர்வு செய்யலாம் என்று கருத்துகூறி அமர்ந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்தவராக சேட்டு எழுந்து, இதுவரைக்கும் அப்படித்தானே நடந்து வந்தது. அதனால் அந்த முறையை மாற்றி பொதுத் தேர்தல் அடிப்படையில் தேர்வு செய்வதுதான் சிறந்தது என்று சொல்ல... அவருடன் சேர்ந்து பலர் குரல் எழுப்பி மிகுந்த சலசலப்பு ஏற்பட்ட போது, போட்டி (ஆன்டி) ஜமாஅத் துணை தலைவர் லத்தீஃப் கருத்து சொல்ல எழுந்தசமயத்தில், OAW பாவாஜான் எழுந்து 'இது இஸ்லாமிய ஜமாஅத்தின் பொதுக்குழு, எனவே இங்கு கருத்து சொல்ல விரும்புவர்கள் இந்த ஜமாஅத்தை ஆதரவளிப்பவர்களாக இருக்க வேண்டும் - அதாவது எதிர் ஜமாஅத் என்கிற அமைப்பில் அங்கம் வைப்பவர்கள் பார்வையாளராக இருந்துவிட்டு போங்கள், கருத்து சொல்ல வேண்டாம்' என்று சொன்னதுதான் தாமதம், பள்ளியின் கண்ணியம் காப்பாற்றாமல் போய்விடுமோ என்கிற அச்சம் கொள்ளும் வகையில் சலசலப்பு கூடுதலானது.இந்த சலசலப்புக்கிடையில் அப்துல் காதர் மதனி மைக் முன் நின்று பள்ளியின் கண்ணியம் குறித்தும், ஒற்றுமைக் குறித்தும் உரையாற்றத் தொடங்கிய போதுதான் அமைதி நிலவியது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment